இலங்கை தமிழர் பிரச்சனை : விடுதலை சிறுத்தைகள் கட்சி நடைபயணம்
இலங்கைத் தமிழர்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது என்றும் இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்காகவும், அவர்கள் படும் இன்னல்களை பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
இந்த நடைபயணத்தின் போது கிராமங்கள், நகரங்களை சேர்ந்த 2 கோடி மக்களை சந்திக்க உள்ளதாகவும், அவர்களிடம் இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்கள் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நடைபயணத்தின் போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஊர்களில் பொதுக் கூட்டம் நடத்தப்படமாட்டாது என்றும் கிராமச் சாலைகளில் உள்ள ஊர்களில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கும் நடைபயணத்திற்கு நான் (திருமாவளவன்) தலைமை தாங்குகிறேன். இதேபோல் கடலூரில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும், இதர மாவட்டங்களில் கட்சி மூத்த உறுப்பினர்களும் நடைபயணத்திற்கு தலைமை தாங்க உள்ளனர்.
ஈழத் தமிழர்களுக்காக இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர் என்றும் இதில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் மலேசியா, ஜெனீவாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக