ராஜபக்சேவின் குரலையே எதிரொலிக்கும் ப.சிதம்பரம்: திருமா


விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் தான் இலங்கையில் போரை நிறுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

”இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த இந்திய அரசால் முடியும்; ஆனால் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போடுவதாக உறுதி அளிக்க வேண்டும்' என்று ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

ஒரு முறைக்கு பல முறை போர் நிறுத்தத்திற்கு தயார் என்றும், இந்தியாவுடன் நட்புறவையே விரும்புகிறோம் என்றும் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

இந்த உண்மையை மறைத்து விட்டு போர் நிறுத்தம் செய்வதற்கு சிங்களவர்கள் தயார் என்பது போலவும், புலிகள் தான் அதற்கு தயாராக இல்லை என்பது போலவும் கருத்தை பரப்பி தமிழர்களை குழப்பும் முயற்சியில் சிதம்பரம் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு எத்தகைய தீர்வு திட்டத்தையும் முன் வைக்காமல், தீர்வு காண்பதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்பது ராஜபக்சேவின் குரலையே எதிரொலிப்பதாகும்.

இதன் மூலம் உண்மையான அரசியல் பின்னணிகளை மக்களுக்கு விளக்காமல் புலிகள் மீது பழிபோட்டு திசை திருப்புவதில் சிதம்பரம் முனைப்பாக இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

மனிதநேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் அக்கறை சிதம்பரத்திற்கோ, இந்திய அரசுக்கோ இருப்பது உண்மையானால் ஜனநாயக அடிப்படையிலான ஒரு தீர்வு திட்டத்தை முன் வைத்து அதற்கான பேச்சுவார்த்தைக்கு முன் ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று சிதம்பரம் போன்றவர்கள் கூறுவது இலங்கை இனவெறியர்களின் கூற்றாகவே அமையும்.

ஆகவே உண்மைகளை திசை திருப்பி பிரச்சனையை மென்மேலும் நீட்டிக்காமல் இலங்கை தமிழர்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு சுமுகமான அரசியல் தீர்வுக்குரிய வரைவு திட்டத்தை இந்திய அரசு முன் வைக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி : நக்கீரன்

1 comments:

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும, வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

பெயரில்லா
18 பிப்ரவரி, 2009 அன்று PM 4:13 comment-delete

கருத்துரையிடுக