பிரணாப் பயணம் தமிழர்கள் பிரச்சனையில் எந்தவித பயனும் அளிக்காது: திருமாவளவன் அறிக்கை




இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம், இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் எந்தவித பயனும் அளிக்காது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை பிரச்சனை குறித்து விவாதிக்க திமுக பொதுக்குழு காலதாமதமாக கூடுவது கவலையளிக்கிறது.

வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் மேற்கொண்ட இலங்கை பயணத்தின்போது, முன்னேற்றம் எதுவும் ஏற்பாட நிலையில், தற்போது பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வதில் எந்தவிதமான பயனும் ஏற்பட போவதில்லை.


பிரணாப் முகர்ஜி எதற்காக இலங்கை செல்கிறார் என்பதை இந்திய அரசு வெளிப்படையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

பிரணாப் இலங்கை செல்ல வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கை, தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்திய அரசு போர் நிறுத்ததை வலியுறுத்துவற்காக வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை கொழும்புக்கு அனுப்புகிறது என்று செய்திகள் வெளியாகவில்லை.

எனவே இந்த பயணம் சிவசங்கர் பயணத்தைப் போல சிங்கள-இந்திய அரசை வலுப்படுத்துவதற்கும், தமிழினத்தை அழிப்பதற்கும்தான் பயன்படும் என்று நம்பவேண்டியிருக்கிறது என்றார்.

0 comments:

கருத்துரையிடுக