கவிஞர் அண்ணாமலை அவர்களுக்கு எழுச்சித்தமிழர் அஞ்சலி!

தலித்துகளின் விடுதலைக் கருத்தியலில் ஈடுபாடு கொண்டவரும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் மீது நீங்கா அன்பும், பற்றும் கொண்டிருந்தவருமான கவிஞர் அண்ணாமலை அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தம் மீது அன்பு கொண்டிருந்தவருக்கு நேரில் சென்று தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி, பிள்ளை மற்றும் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னார்.

'எனக்கு பிடிச்ச தலைவர் திருமாவளவன்.. அவருக்கு பாட்டு எழுதுவது ரொம்ப பிடிக்கும்னு சொல்லுவீங்களே.. இப்ப அவரே வந்திருக்காரு பாருங்க' என்று அண்ணாமலை அவர்களின் மனைவி கதறியது எல்லோரையும் கண் கலங்க வைத்தது. கடந்த பொங்கலுக்கு தலைவர் தனக்கு பரிசளித்த பட்டு வேட்டி, சட்டையை அவ்வப்போது சொல்லி விரும்பி அணிவாராம். இன்றும் அதே பட்டு வேட்டியைத்தான் அவர் உடல் மீதும் போர்த்தியிருப்பதாக அவரது மனைவி தெரிவித்தார். இடுகாடு வரையிலான இறுதி ஊர்வலத்திலும் தலைவர் அவர்கள் இறுதி வரை நடந்தே சென்று பங்கெடுத்தார்.

கவிஞர் அண்ணாமலை அவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், கட்சியின் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்னி அரசு.

0 comments:

கருத்துரையிடுக