16ஆம் தேதி முழு அடைப்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆதரவு

16ஆம் தேதி முழு அடைப்பு 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆதரவு

தொல் திருமாவளவன் அறிவிப்பு


காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்ததிற்கு கிடைத்திடவேண்டிய நீரை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும், கருநாடகாவில் தமிழர்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை கண்டித்தும் தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் 16ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட விவசாய அமைப்புகளும், வணிகர்களின் அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன. இந்தக் கோரிக்கைகளுக்குப் பின்னால் எவ்வித வேறுபாடுமன்றி ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றாக நிற்கிறது என்பதை காட்டும்விதமாக முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வது அவசியமாகும்.

எனவே, நாளை (16-9-2016) நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, தமது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் அனைத்து அமைப்புகளும் பங்கேற்று முழு அடைப்பை வெற்றிப்பெறச் செய்யுமாறு விடுதலைச்சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. தமிழ்நாட்டின் உயிர் ஆதரமான காவிரிப்பிரச்சனையில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே குரலில் முழங்குகிறது என்பதை உலகுக்கு காட்டும் வண்ணம் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று முழு அடைப்பை வெற்றிப்பெறச் செய்யுமாறு தமிழக மக்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்0 comments:

கருத்துரையிடுக