தோழர் தா.பாண்டியன் . கார் எரிப்பு: திருமா கண்டனம்


தோழர் தா.பாண்டியன் . கார் எரிப்பு: திருமா கண்டனம்




சென்னையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா இண்டிகா காரும், டி.வி.எஸ். ஸ்கூட்டி பைக்கும் திடீரென எரிந்து நாசமாயின.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,

இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நேற்று நள்ளிரவு வேளையில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. இந்த வன்முறைச் செயல் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.

தோழர் தா. பாண்டியன் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்திய சிங்கள அரசுகள் நடத்தும் இனப்படுகொலை யைத் தடுத்து நிறுத்துவதற் காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு தோழமை இயக்கங்களோடு இணைந்து போராடியும் வருகிறார்.

குறிப்பாக, இந்திய அரசின் துரோகத்தை மிகக் கடுமையாகவும் வெளிப்படை யாகவும் விமர்சித்து வருகிறார். இதனால் ஆத்திர மடைந்த வன்முறைக் கும்பல் தான் இத்தகைய இழி செயலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று நம்ப முடி கிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய குற்றவாளி களை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போருக்கு எதிராக இவ்வாறான தாக்குதல் நடைபெறுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இயக்குநர் சீமான் காரை எரிக்க முயற்சி நடந் தது. மீண்டும் அதைப் போலவே கார் எரிப்பு வன்முறை அரங்கேறியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டோரின் செயல்தான் இது என்பதை உறுதிப்படுத்துகிறது.

எனவே ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, குறிப்பாக இந்திய அரசின் போக்கைக் கண்டித்துச் செயல்பட்டு வரும் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், இவ்வாறான வன்முறைகள் பரவாமல் தடுக்கவும் ஆவன செய்யுமாறு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக