தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இந்தியா அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் -திருமாவளவன் அறிக்கை


பொது வேலை நிறுத்தம் -தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு
போரை நிறுத்தஇந்தியா அரசு நடவடிக்கை
மேற்கொள்ளவேண்டும் -திருமாவளவன் அறிக்கை


பொது வேலை நிறுத்தம் -தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு போர் நிறுதர்த்திற்குரிய நடவடிகைகளை இந்தியா அரசு மேற்கொள்ள வேண்டும் என்று -திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்




ஈழ தமிழினத்தை அழித்தொழிக்கும் சிங்கள -இந்தியா அரசுகளின் இனவெறி போரை நிறுத்த வலியுறித்தி 04-02-2009 அன்று நடைபெற்ற வேலை நிறுத்தம் தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைந்தது.தமிழக அரசின் சட்டத்தின் பெயரிலான அச்சுறுத்தல்களையும் மீறி அனைத்து தரப்பு மக்களும் தன் எழுச்சியாக பங்கேற்று இந்தியா ஆட்சியாளர்களை உலுக்கும் வகையில் ஒரு அமைதி புரட்சியை நடத்தி இருக்கின்றனர் .இந்தியாவையும் தமிழகத்தையும் ஆளுகின்ற ஆளும் கட்சிகள் . தமிழகத்தின் முதன்மையான எதிர்கட்சிகள் மற்றும் மார்க்சிய பொதுஉடமை கட்சி ஆகியவை பங்கேற்காதது மட்டுமின்றி எதிரான நிலைபாட்டை மேற்கொண்டும் கூட இந்த பொது வேலைநிறுத்தம் 80% வெற்றியடைந்துள்ளது இது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் அறைகூவலுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட கட்சி அரசியலை தாண்டி தமிழக மக்கள் சார்ந்து இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும் .

தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர் தடுப்பு சட்டம் போன்றவை பாயும் என காவல் துறை எச்சரித்தும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை திறக்க சொல்லி வலியுறுத்தியும் அரசு பேருந்துகளை ,தொடர் வண்டிகளை பயணிகள் இல்லாமலே இயக்கியும் இந்த பொது வேலை நிறுத்தத்தை நீர்த்து போக செய்வதற்கு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளபட்டன . இவற்றை எல்லாம் மீறி இந்திய - சிங்கள அரசுகள் நடத்தும் இன படுகொலையை எதிர்த்து தமது உள்ளகொதிப்பையும் தமிழக மக்கள் இந்த போராட்டத்தின் மூலமாக வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த பொது வேலை நிறுத்தத்தை அரசியல் கட்சிகளுகிடையிலான செல்வாக்கை நிலைநாட்டும் போட்டியாக கருதி இப்போராட்டத்தை வலுவிழக்க செய்வதற்கு அரசு தரப்பில் இருந்து மேற்கொள்ளபட்ட முயற்சியானது மிகுந்த வேதனையை தருகின்றது .ஒட்டு மொத்த தமிழினத்தையே இழிவுபடுத்தும் இந்திய அரசையும், ஈழ தமிழ் மக்களை அழித்தொழிக்கும் வெறி கொண்டு அலையும் சிங்கள அரசியயும் கண்டிப்பதற்கான ஒரு அறவழி போர் என்கிற அடிபடியில் ஆதரிக்கவில்லை என்றாலும் கூட எதிர்க்காமல் இருந்திருக்கலாம் என்பது தான் உலக தமிழ் மக்களின் விருப்பமாக உள்ளது. தி .மு .க , ஆ.தி.மு.க, காங்கரஸ், மார்க்சிய போன்ற முதன்மை கட்சிகள் ஆதரிக்காமல் கூட இபோரட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையை தொடர்ந்து இந்திய அரசு தமிழக மக்களின் உணர்வை புரிந்து ,நிறுதர்த்திற்குரிய நடவடிகைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் சமூகம் எதிர்பார்கிறது .


இப்போராட்டத்தை ஒட்டி விடுதலை சிறுத்தைகள் உட்பட 2000கும் அதிகமானோர் கைது செய்யபட்டுள்ளனர் .அவர்கள் அனைவரையும் தமிழக அரசு உடனடியாக விடிவிக்க வேண்டும் எனவும் ,அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.அமைதியாகவும் முழுமையாகவும் இந்த போராட்டத்தை வெற்றி பெற செய்த வணிகர்கள்,மாணவர்கள்,வழகறிஞ்சர்கள் ,தொழிலாளர்கள் அனைத்து தரப்பு பொது மக்களுக்கும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த அனைத்து கட்சிகளுக்கும் ,இயக்கங்களுக்கும் அதனை சார்ந்த தோழர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

இவன்
------திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக