ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக்கை தொல்.திருமாவளவன் கருத்து

ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக்கை

தொல்.திருமாவளவன் கருத்து

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று தனது முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளதுஅதில் மக்களுக்கு நன்மைபயக்கும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என பரவலான எதிர்பார்ப்பு இருந்ததுஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாஏமாற்றமளிப்பதாக அந்த நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது.  அனைத்துத் தரப்பு விவசாயிகளுக்கும் அவர்கள் பெற்ற அனைத்து வங்கிக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.  ஆனால்அதற்கான அறிவிப்புகள் இடம்பெறவில்லை

மாணவர் கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்ய எந்த அறிவிப்பும் இல்லை.  தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான அறிவிப்பு எதுவும் இதில் இடம்பெறவில்லை.  தமிழ்நாட்டில் உள்ள குடிசை வீடுகளையெல்லாம் மாற்றிவிட்டு கான்கிரீட் வீடுகளைக் கட்டித்தர வேண்டும்தமிழகத்தை குடிசையில்லாத மாநிலமாக மேம்படுத்த வேண்டும் என்று கோரி வந்தோம்.  அதைப்பற்றிய அறிவிப்புகள் எதுவும் இதில் இடம்பெறவில்லை.

பெண்களின் முன்னேற்றத்துக்கோதாழ்த்தப்பட்ட பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கோ புதிய திட்டங்கள் ஒன்றுகூட அறிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம்  தேர்தலின்போது அதிமுக வாக்குறுதி அளித்தது.  கண்துடைப்பாக 500 கடைகள் மட்டும் மூடப்பட்டன.  அடுத்தகட்டம் என்ன என்பதைப் ற்றியோபடிப்படியாக மதுவிலக்கை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பது பற்றியோ எந்தவித அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.
2011ஆம் ஆண்டு பதவியேற்றபோது இதே அதிமுக அரசால் உறுதியளிக்கப்பட்ட எந்தவொரு திட்டம் குறித்தும் இதில் ஒரு வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை.  புதிய மின் திட்டங்களை உருவாக்குவது பற்றியோ மோனோ ரயில் திட்டத்தைப் பற்றியோமுதியோர் இல்லங்களைக் கட்டித் தருவது பற்றியோ ஒரு வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை.

ஆண்டுகளில் 10 இலட்சம் வீடுகள் கட்டப்போவதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு முழுவதும் ள்ள குடிசை வீடுகளைக் கணக்கெடுப்பு செய்து 21 இலட்சம் வீடுகள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டது.  அந்தத் திட்டத்தை 2011ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்றபோது கைவிட்டுவிட்டார்கள்.  கடந்த 5 ஆண்டுகளில் குடிசைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து விட்டது.  எனவேமீண்டும் தமிழ்நாடு முழுவதும் குடிசை வீடுகள் கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும்.

குடிசையில்லாத தமிழகமாக இந்த மாநிலத்தை மாற்ற வேண்டும் என்று மிழக அரசை வலியுறுத்துகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகி கடும் இழப்புகளைச் சந்தித்துவரும் திருவள்ளூர்சென்னைகாஞ்சிபுரம்விழுப்புரம்கடலூர் மாவட்டங்களில் நிரந்தரமான வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கிறது.  கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சென்னையில் கன மழை பெய்யும் என வல்லுநர்கள் ச்சரித்துள்ள நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாதது வேதனையளிக்கிறது.


ஆக மொத்தத்தில் இந்த நிதிநிலை றிக்கை தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் எதையும் நிறைவு செய்யாத ஏமாற்றமளிக்கும் நிதிநிலை றிக்கையாக உள்ளது.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக