மே 1 - உலகத் தொழிலாளர் நாள்
மே 1 - உலகத் தொழிலாளர் நாள்
உலகத்தை விடிய வைக்கும் உழைக்கின்ற வர்க்கம் - ஒருபோதும்
அரசியல் மாற்றத்தைக் கொடுக்காமல் கண்டதில்லை மார்க்கம்
தொல்.திருமாவளவன் அறிக்கை
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக் கொள்கையை விடுதலைச் சிறுத்தைகள் முன்மொழிந்ததற்குக் காரணமே தொழிலாளர் வர்க்கத்தை உழைப்புச் சுரண்டலிலிருந்து மீட்டெடுப்பதற்காகத்தான். தொழிலாளர்களை முதலாளிகள் மட்டும் சுரண்டுவதாகக் கருதக் கூடாது. ஆளுகின்ற அரசும் சுரண்டிக்கொண்டேதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் டாஸ்மாக். தொழிலாளர்களுக்குக் கொடுத்த கூலியைப் பிடுங்கிக்கொள்ள டாஸ்மாக் கடைகளை அரசே நடத்துகிறது.
கூலித் தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கானோர் நாளெல்லாம் பொழுதெல்லாம் பாடுபட்டு பெற்ற கூலியை மதுக்கடையில் கொடுத்துவிட்டு காலையில் மயங்கிக் கிடக்கும் அவலத்தை நாம் பார்க்கிறோம். அரசும் முதலாளித்துவமும் இணைந்தே தொழிலாளர்களை ஏமாற்றியும் சுரண்டியும் வருகின்றன. அதை எதிர்த்துக் களமாடுவதற்குத்தான் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட பொதுவுடைமைக் கட்சிகளோடு என்றென்றைக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சமூகத் தளத்தில் கரம் கோர்த்தே பயணித்து வருகிறது.
மக்கள் நலக் கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என அனைத்துத் தொழிலாளர்கள் நலன் கருதி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளோம். அதில் ஒன்றுதான் மதுக் கடைகளை மூடுவதற்கு மக்கள் நலக் கூட்டணி உறுதியளித்துள்ளது. அதேவேளையில், மது அருந்துகின்ற தொழிலாளர்கள், உடல் உழைப்பாளிகள் இனி மது அருந்த மாட்டோம் என தொழிலாளர் தினமான இன்று உறுதிமொழி ஏற்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
மக்கள் நலக் கூட்டணி என்பது தொழிலாளர்களின் கூட்டணியாகும். அனைத்துத் தரப்புத் தொழிலாளர்களின் வாழ்வில் வெளிச்சம் பிறக்கட்டும். அதற்கு நடைபெறும் தேர்தல் ஒரு மாற்றத்தைக் கொடுக்கட்டும்.
உலகத்தை விடிய வைக்கும் உழைக்கின்ற வர்க்கம் - ஒருபோதும்
அரசியல் மாற்றத்தைக் கொடுக்காமல் கண்டதில்லை மார்க்கம்
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக