விடுதலைச் சிறுத்தைகளின் மே நாள் செய்தி
உலகெங்கும் இருக்கும் உழைக்கும் மக்களின் திருநாளாக மே நாள் கொண்டாடப்படுகிறது. உழைப்பை அங்கீகரிக்கும் இந்த நாளில் நாடெங்கும் இருக்கும் தொழிலாளத் தோழர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் மே நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
உலகமயக் கொள்கையின் காரணமாக உழைக்கும் மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டியது அவசியம். சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்களது சுயநல சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டியது தொழிலாளர் வர்க்கத்தின் கடமையாகும்.
கடல் தொழிலாளிகள் எனப்படும் மீனவ மக்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். சிங்களக் கொடுஞ்சிறைகளில் பல வாரங்களாக 56 மீனவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். சிங்கள அரசு தொடர்ந்து அவர்களது காவலை நீட்டித்து வருகிறது. இன்னலுக்காளாகி சிறையில் வாடும் கடல் தொழிலாளர்களாம் மீனவர்களை மீட்பதற்கு இந்த மே நாளில் உறுதியேற்போம் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக