ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: திருமாவளவன் போராட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதை இந்திய ராணுவம் கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள எந்த ராணுவ முகாமிலும் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது. அவர்களை உடனடியாக இந்தியாவை விட்டு மத்திய அரசு வெளியேற்ற வேண்டும்.
புத்தமத விழாவில் பங்கேற்க வருகிற 21-ந்தேதி மத்திய பிரதேசத்திற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது. ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து விடுதலை சிறுத்கைதள் கட்சி மாபெரும் போராட்டம் நடத்தும். அது என்ன போராட்டம் என்பதை விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் வன்னியரசு, மடிப்பாக்கம் வெற்றிசெல்வம், இரா.செல்வம், சேகுவேரா, கபிலன், செந்தமிழன், கி.பிரபாகரன், கல்தூண் ரவி, அம்பேத் மகா மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
0 comments:
கருத்துரையிடுக