நம் ஈழம் மீட்போம்
- தொல்.திருமாவளவன்
தமிழருக்குச் சொந்தமாகத் தாயகம் வேண்டும்!
தமிழ்ப்பேசும் இனமென்னும் தேசியம் வேண்டும்!
தம்மைத்தாமே அரசாள ஆட்சியும் வேண்டும்!
தமிழர்க்கொடி உலகஅவையில் பறந்திட வேண்டும்!
சேரநாடு சோழநாடு பாண்டியநாடு!
செந்தமிழர் அரசாண்ட முத்தமிழ்நாடு!
வீரநாடு ஈழநாடு வேங்கையர்நாடு!
வீரத்தைப் பயிர்செய்யும் புலித்தமிழ்நாடு!
வீரப்போரில் ஏந்தும்வில் சேரன்கொடி!
வீறுகொண்டு பாயும்புலி சோழன்கொடி!
விளையாடி துள்ளும்மீன் பாண்டியன்கொடி!
விண்முட்ட பறந்ததுவே தமிழன்கொடி!
கோட்டைகட்டி கொடிநாட்டி நாடுகாத்தான்!
கோலோச்சும் நல்லறத்தால் நீதிகாத்தான்!
படைகட்டிப் பகைவிரட்டிக் குடிகாத்தான்!
பழந்தமிழர் இறையாண்மை பாதுகாத்தான்!
நாடாண்ட பரம்பரை தமிழர்அன்று!
நாடுண்டா அரசுண்டா உலகில்இன்று!
நாடொன்று நமக்கென்று தேவைஇன்று!
நம்ஈழம் மீட்டெடுப்போம் பகைவென்று!
தமிழீழத் தேசத்தின் விடுதலைதான்
தமிழ்த்தேசிய இனத்திற்கே விடுதலையாம்!
தமிழீழ இறையாண்மை வெற்றிதான்
தமிழினத்தின் ஒட்டுமொத்த வெற்றியாம்
நன்றி : ’தை’
0 comments:
கருத்துரையிடுக