வாழ்நாள் சாதனையாளர் விருது விழாவில்...


இலயோலா கல்லூரியின் வரலாற்று ஆராய்ச்சி மையம் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கியது. 06.02.2012 செவ்வாய்கிழமை அன்று லயோலா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுடைய  சமூக சேவையை போற்றுவதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. விழாவில் விருதினை பெற்றுக்கொண்ட தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஏற்புரை ஆற்றினார். இவ்விழாவில் திராவிடக் கழக தலைவர் கீ.வீரமணி, அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரீதா ரெட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், லயோலா கல்லூரி முதல்வர் ஜெயராஜ், துணை முதல்வர் ஆரோக்கிய சாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

0 comments:

கருத்துரையிடுக