எம்.ஜி.ஆருக்கு பின் ஒருபோதும் அ.தி.மு.க. ஈழத்தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டியதில்லை
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இரட்டை மலை சீனிவாசனாரின் பிறந்த தினவிழா மற்றும் மக்களவையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாதாடும் தொல்.திருமாவளவனுக்கு பாராட்டுவிழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
விழாவில் பேசிய தொல். திருமாவளவன் ஜாதி நெருக்கடி மிகுந்த தமிழக அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்ற எழுச்சி பெருமைக்குரியது என்று தெரிவித்தார்.
ஈழ மக்கள் இலங்கையில் அழித்து ஒழிக்கப்பட்டபோது ஆறரை கோடி தமிழர்களும் கைகட்டி வேடிக்கை பார்த்த கொடுமையை சுட்டிக்காட்டிய அவர் நம்பிய அனைவரும் ஈழ மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்று வேதனை தெரிவித்தார்.
ஈழ மக்களுக்காக போராடி வந்த அரசியல் இயக்கங்கள் தேர்தல் என்றதும் எம்.ஜி.ஆருக்கு பின் ஒருபோதும் ஈழத்தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டாத அ.தி.மு.க. கூட்டணியைத் தேடி ஓடிவிட்டார்கள். அவர்கள் ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்திருந்தால் அரசியல் நிலைமை இன்று மாறியிருக்கும் என்றார்.

முன்னதாக தொல்.திருமாவளவனுக்கு தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்தனர். இதில் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் கா. கலைக்கோட்டுதயம், வன்னியரசு, பார்வேந்தன், பாவரசு, ஆர்வலன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

***
0 comments:
கருத்துரையிடுக