ஈழ விடுதலைக்கான ஐந்தாம் போரை சர்வதேச சூழல்களுக்கு ஏற்ப உத்திகளை வகுத்துச் செயல்பட உலகத்தமிழர்கள் தயாராக வேண்டும்:தொல்.திருமாவளவன்
ஈழ விடுதலைக்கான ஐந்தாம் போரை சர்வதேச சூழல்களுக்கு ஏற்ப உத்திகளை வகுத்துச் செயல்பட உலகத்தமிழர்கள் தயாராக வேண்டும்.
தொல்..திருமாவளவன் அறிக்கை
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டம் நெருக்கடியான சிக்கல்கள் நிறைந்த வரலாற்று சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இச்சூழலில் இவ்விடுதலை போராட்டத்தை வீரியத்தோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும் கடைமையும் உலக தமிழினத்திற்கு உள்ளது. குறிப்பாக, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இந்த வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளனர். இவ்வாறான சூழல்களில் எதிர்ப்போராட்ட சக்திகளை அடையாளம் காண்பதும் அவர்களின் சதி முயற்சிகளை முறியடிப்பதும் உண்மையான புரட்சிகர சக்திகளின் தார்மீக கடமையாகும். அந்த வகையில் தமிழீழ விடுதலை போராட்டத்தை நீர்த்து போகச் செய்யும் வகையில் எதிரிகளும், எதிரிகளுக்கு துணைப்போகும் எதிர்ப்போராட்ட சக்திகளும் தற்போது தலையெடுக்கத் துணிந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது. குறிப்பாக தமிழீழ தேசிய தலைவரையும், தமிழீழ தேசிய கொடியையும், தமிழ் ஈழத்தின் இறையாண்மையும் பின்னுக்குத்தள்ளி, ஈழ விடுதலைப்போராட்டத்தை வீரியம் இழக்க செய்யும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுவதையும் அறிய முடிகிறது.
அனைத்துலக சமுகமே அதிர்ச்சியும் வியப்பும் அடையும் வகையில் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வந்துள்ள பெருந்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் ஏற்றிவைத்துள்ள விடுதலை பேறொளியை அணைத்துவிடத் துடிக்கும் சிங்கள இனவெறி சக்திகளுக்குத் துணைபோகும் வகையில் இத்தகைய எதிர்ப்போராட்ட சக்திகள் செயல் படுவது தெரிகிறது. எனவே, எதிரிகளை அடையாளம் கண்டிருப்பதை போல, நமக்குள் ஊடுருவ முயற்சிக்கும் எதிர்ப்போராட்ட சக்திகளையும் நாம் அடையாளம் காணவேண்டும். தமிழ்ச் சமுகத்தின் ஒரே வேட்கையான தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் வரையில் மேதகு பிரபாகரன் அவர்களும் தமிழீழ தேசிய கொடியும் நம்மை வழிநடத்தும் சக்திகள் என்பதை உலகத்தமிழினம் மறந்துவிடக் கூடாது என்பதை விடுதலைச்சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.
ஈழ விடுதலைக்கான ஐந்தாம் போரை சர்வதேசச் சூழல்களுக்கு ஏற்ப உத்திகளை வகுத்து செயல்பட உலகத்தமிழர்கள் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக