உலக தமிழர்களுக்காக திருமாவளவனின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு பெரும் வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ..வெற்றியை கொண்டாடும் விதத்தில் சென்னையில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..
17-05-2009 அன்று காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு தொண்டர்கள் படை சூழ வந்து மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார் ..
அப்போது கட்சி தொண்டர்களிடம் உரையாற்றும் போது .. "ஒடுக்கப்பட்ட , சிறுபான்மையின மக்களுக்காகவும், ஈழதமிருக்காகவும் , உலக தமிழர்களுக்காகவும் திருமாவளவனின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்" என்று உறுதிபட கூறினார்..
"என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கும், வெற்றிக்காக உழைத்த தோழமை கட்சிகளுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் " என்றார் ..
அங்கிருந்து புறப்பட்டு பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் .. அதனை தொடர்ந்து அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ...
இந்த வெற்றியை விடுதலை சிறுத்தைகள் உற்சாகத்தோடு கொண்டாடினர்..

0 comments:
கருத்துரையிடுக