மே28 -ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அஞ்சலி,சென்னையில் அமைதிப்பேரணி


ஈழ தமிழர்களின் விடுதலைக்காக பல்வேறு தியாகங்கள் செய்து மண்ணை மீட்கும் போராட்டத்தில் வீர மரணமடைந்த தமிழீழ விடுதலை புலிகளையும், ஈழ தமிழர்களையும் ஈவிரக்கமற்ற முறையில் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசைக் கண்டிக்கும் வகையிலும்,அதற்கு உதவிவருகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்திய அரசின் தமிழின விரோதபோக்கை கண்டித்தும் , களப்பலியான ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மே 28 2009ஆம் நாள் சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர், எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் அமைதிப்பேரணி நடைப்பெறுகிறது.



சென்னை மன்றோ சிலையில் இருந்து மாலை 3 மணியளவில் தொடங்கும் இப்பேரணி சேப்பாக்கத்தில் நிறைவுபெறும்.தமிழர்களாய் தமிழருக்காக உணர்வாளர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு ஆதரவுத் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


1 comments:

மேதகு தோல்.திருமாவளவன் அவர்களுக்கு
நீங்கள் சொன்னது போலவே சென்னையில் இருந்து டெல்லி சென்று வீட்டீர்கள் இனி எம் ஈழ உறவுகளுக்காக என்ன செய்ய போகிறீர். "மே28 -ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அஞ்சலி,சென்னையில்" உங்கள் அழைப்பு கண்டேன். இதனால் எம் ஈழ மக்கள் என்ன பயன் அடைவர் என தெரியவில்லை. இதற்கு பதிலாக தங்கள் என் டெல்லி சென்று மேதகு பிரதமர் அவர்களை சந்தித்து உங்கள் கண்டங்களையும், ஈழ தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காக உங்களின் வற்புறுத்தல்களையும் தெரிவிக்க கூடாது. அப்படி செய்தல் உங்கள் பேரணிகளை காட்டிலும் நல்ல பலன் விளைவிக்கும் என நான் நம்புகிறேன்.

27 மே, 2009 அன்று 6:09 PM comment-delete

கருத்துரையிடுக