விடுதலை சிறுத்தைகளுக்கு நட்சத்திர சின்னம் - உச்சநீதிமன்றம் ஆணை
பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு "நட்சத்திர'' சின்னம் ஒதுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தங்களுக்கு 2 தொகுதிகளிலும் நட்சத்திர சின்னம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்ல் விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு மீதான விசாரணை இன்று காலை நீதிபதிகள் பாலகிருஷ்ணன், சதாசிவம் ஆகியோர் முன்பு வந்தது.
அப்போது தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாதாடிய வக்கீல் மீனாட்சி அரோரா, மிசோரம் மாநில அரசியல் கட்சி ஒன்றுக்கு ஸ்டார் சின்னம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு உள்ளதால் மற்ற கட்சிகளுக்கு அந்த சின்னத்தை வழங்க முடியாது என்று கூறினார்.
இதற்கு விடுதலை சிறுத்தைகளின் வக்கீல் ராஜீவ் தத்தா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் விடுதலை சிறுத்தை கட்சி தேசிய கட்சி அல்ல, அது மாநில கட்சி குறிப்பாக தமிழகத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு நட்சத்திர சின்னத்தை ஒதுக்குவதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று வாதிட்டார்.
இரு தரப்பினரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளிலும் நட்சத்திர சின்னத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

***
விடுதலை சிறுத்தைகளுக்கு நட்சத்திர சின்னம் - எமக்கு கிடைத்த முதல் வெற்றி தொல்.திருமாவளவன் அறிக்கை
தி.மு.க தலைமையிலான சனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் சிதம்பரம்.விழுப்புரம் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதியில் போட்டிடுகின்றது .இரண்டு தொகுதிகளிலும் பொதுவான சின்னமாக நட்சத்திர சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனை இன்று விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு விடுதலை சிறுத்தைகள் கோரிய நட்சத்திரம் சின்னத்தையே வழங்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு ஆணை பிறப்திருக்கின்றது .
விடுதலை சிறுத்தைகளின் கொடியில் இருக்கும் நட்சத்திரமே தேர்தல் சின்னமாக கிடைத்திருப்பது எமக்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு விடுதலை சிறுத்தைகளுக்கு கிடைத்த வெற்றியாக இதை கருதுகிறோம் .எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதியின் வாக்காளர்கள் விடுதலை சிறுத்தைகளின் நட்சத்திர சின்னத்தில் வாக்களித்து பேராதரவை தந்து வெற்றி பெற செய்யும்படி கேட்டுகொள்கிறேன்
--- தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக