எக்காலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் விடுதலைசிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்காது - திருமா

தமிழ் குடிதாங்கி போராட்ட களத்தில்
உண்ணாநிலைக்கு அதரவாக தமிழின உணர்வாளர்கள்

ஈழ தமிழர்களை காப்பற்றும் எண்ணம் உண்மையாகவே இருக்குமானால் வைகோ தா.பாண்டியன் ஆகியோர் ஆ.தி.மு.க வை தனிமை படுத்த வேண்டும் .- திருமா கோரிக்கை

பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைக்கும் தமிழ் குடிதாங்கி
ஆவேச உரை நிகழ்த்தும் திருமா






லட்சக்கணக்கில் திரண்ட தமிழின உணர்வாளர்கள்

இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சென்னையை அடுத்த மறை மலைநகரில் கடந்த 15-ந் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார்.

இன்று நான்காவது நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

இந்நிலையில் இன்றூ மாலை பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

உண்ணாவிரத மேடையில் திருமாவளவன் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார்.


‘’உலகத்திலேயே சிறந்த தளபதி என்று இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகாவை புகழ்ந்திருக்கிறார் ஒரு காங்கிரஸ்காரர்.

காங்கிரஸ்காரர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாது. அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். உண்மையில் உலகத்திலேயே கொடூராமன அரக்கன் இலங்கை ராணுவத்தளபதிதான்.

கிளிநொச்சியை பிடிக்க முற்பட்ட சிங்களப் படைகளை விடுதலைப்புலிகள் விரட்டி அடித்தார்கள். வேறு வழியின்றி சிங்களப்படை பின்வாங்கியது. அந்த சமயத்தில் இந்திய அரசுதான் சிங்களப்படைக்கு ராணுவ உதவிகளை கொடுத்து கிளிநொச்சியை கைப்பற்ற வைத்தது.

இப்படி ஒரு கேடுகெட்ட செயல்களை செய்துவருகிறது காங்கிரஸ்.

ஈழப்பிரச்சனை தொடர்பாக எத்தனை போராட்டம் நடந்தாலும் காங்கிரஸ் கொஞ்சம் கூட அசைந்துகொடுக்க மறுக்கிறது.

தமிழர்களைப் பொறுத்தவரை முதல் எதிரி காங்கிரஸ்தான்.இனி எக்காலத்திலும் அக்கட்சியுடன் விடுதலைசிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்காது. அதுமட்டுமல்ல, இனி காங்கிரஸ் கட்சியை புல், பூண்டு தெரியாமல் இருக்கும் இடமே தெரியாமல் அழிக்க வேண்டும்’’

0 comments:

கருத்துரையிடுக