இலங்கை தமிழர்களுக்காக மும்பையில் அறப்போராட்டம்: தொல்.திருமாவளவன் ஆவேசப் பேச்சு


மும்பையில் சனிக்கிழமை (14.02.09) அன்று அய்யா வைகுண்டரின் 177-வது அவதார விழாவை முன்னிட்டு மூன்றாவது சமயவழி மாநாடு நடந்தது. தாராவி டோர்வாடா மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்த இந்த சமய மாநாட்டிற்கு காமராஜ ஆங்கில உயர்நிலப் பள்ளித் தலைவர் ஏ.ராமராஜா தலைமை தாங்கினார். ஜி.நம்பிராஜன், கே.வி.அசோக்குமார்,எஸ்.ஏ.சுந்தர், வி.பி.ராமையா, அண்ணாமலை, எம்.கருண் ஆகியார் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாநாட்டு துவக்க உரை ஆற்றினார். அய்யாவழி சமயத் தலைவர் மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் சிறப்பு ஆன்மீக உஅரயாற்றினார்.


மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது:
ஆன்மீகத்துக்கும் , திருமாவளவனுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். அண்ணல் அம்பேத்கரின் வழியில் , தந்தை பெரியார் வழியில் நடக்கிற நான் இந்த மாநாட்டில் எப்படி கலந்து கொண்டேன் என்ற ஐயம் உங்களுக்கு இருக்கும் . அதனை இங்கே தெளிவு படுத்துவது எனது கடமை. ”அன்புதேசம்“ கட்சி தொடங்கிய மாநாட்டில்தான் முதன்முதலாக அய்யா பாலபிரஜாபதி அடிகளாரை சந்திதேன். அம்மாநாட்டில் நான் பேசும்போது, தாழ்த்தப்பட்டவர்கள் பிற சாதியை சேர்ந்த அண்ணா, கலைஞர், இந்திரா, காமராஜர், நேரு என எல்லா அரசியல் தலைவர்களின் பெயர்களையும் வைக்கிறார்கள். ஆனால் பிற சாதியினர் அம்பேத்காரின் பெயரை வைப்பதில்லை என்று வேதனை பட்டேன். சேரிகளில்தான் கருணாநிதி இருக்கிறார்கள், ஜெயலலிதா இருக்கிறார்கள், அண்ணா இருக்கிறார்கள். ஆனால் மற்ற சாதிகாரர்களிடையே அம்பேத்கார் பெயர் வைத்தவர்கள் கிடையாது என்று வேதனை பட்டு பேசினேன். அப்போது மேடையில் அடிகளார் சொன்னர் , இனி நான் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது அம்பேத்காரின் பெயரை வைப்பேன் என்று. மேடையில் பேச்சு அழகுக்காக சிலர் பேசுவது உண்டு. ஆனால் அய்யா அப்படி இல்லை. அவர் மேடையில் பேசியதோடு அல்லாமல் செய்தும் காட்டினார். அம்பேத்காரின் பெயரை குழந்தைக்கு சூட்டியதோடு என்னை தொடர்பு கொண்டு அந்த செய்தியையும் தெரிவித்தார்.


அதேப்போல் “அன்புதேசம்” மாநாட்டில் என்னை அவரது மூத்த மகனாக அறிவித்தார். அன்று முதல் இன்று வரை அந்த சொல்லை இந்த நொடிவரை காப்பாற்றி வருகிறார். அவரது குடும்பத்தில் நடக்கும் எந்த நல்லது, கெட்டது ஆனாலும் இந்த திருமாவளவன் இல்லாமல் நடக்காது. ஒரு மூத்த மகன் ஸ்தானத்தில் வைத்து என்னை வழி நடத்துகிறார். அடிகளாரின் தாயார் இறந்தபோது கூட , அவரது திருமுகத்தை என்னிடம் காட்டிய பிறகுதான் நல்லடக்கம் நடந்தது. எந்த நிகழ்ழ்சியாக இருந்தாலும், எவ்வளவு பெரிய தலைவார்கள் வந்தாலும் திருமாவளவனுக்குதான் அடிகளார் முதல் மரியாதை கொடுப்பார். இது எனக்கு பெருமை. அய்யாவழி ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள கூடிய வழி. அம்பேத்கார், பெரியார் வழியை பின்பற்றுபவர்கள் தவறாமல் பின்பற்றக் கூடிய வழி. இப்போது தெரிந்திருக்கும் திருமாவளவன் இந்த வழிக்கு ஏன் வந்தான் என்று. அம்பேத்கார், மகாத்மா புலே, தந்தை பெரியார் போன்ர்றவர்களுக்கு முன்பே புரட்சி செய்தவர் வைகுண்டர் அய்யா . உருவ வழிபாடு, அருவ வழிபாடு, அருவுருவ வழிபாடு எல்லாவற்றையும் தாண்டி நீதான் கடவுள், என நிலைக்கண்ணாடி முன்பு நம்மை வணங்கச் செய்யும் அய்யாவின் புரட்சிகர சிந்தனையை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டேன். அண்ணாவுக்கு, கலைஞருக்கு, திருமாவளவனுக்கு முன்னோடியாக பெரியார் இருந்தார். அம்பேத்கார் இருந்தார். ஆனால் எந்த முன்னோடியும் இல்லாமல் சாதிவெறி தலை விரித்தாடிய ,”அண்டாமை”, காணாமை”, தீண்டாமை” என நாட்டிலேயே அதிக கொடுமைகலள் நடந்த கேரளாவின் திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தை எதிர்த்து முண்டாசு கட்ட சொன்னவர் வைகுண்ட அய்யா அவர்கள். அய்யாவழி ஒரு பகுத்தறிவு ஆன்மீகம்.

அன்பு, அறம், நல்லிணக்கத்தை போதிக்கும் பௌத்த மதத்தை இழிவு படுத்தும் தேசம்தான் இலங்கை. அன்பை போதிக்கிற, தமிழினத்தை, ஈழ தமிழனத்தை பாதுகாக்கும் வழி அய்யா வழி. மும்பையிலே இலங்கை தமிழர்களுக்கு ஆதராவாக மாபெரும் அறப்போரட்டத்தை இங்கு உள்ள தமிழர்கள் நடத்த வேண்டும். அந்த அறப்போராட்டத்திற்கு நானும், பால பிரஜாபதி அய்யாவும் வருவோம் , நீங்கள் எங்களுக்கு அழைப்பு விடுங்கள். நாங்கள் வர தயாராக இருக்கிறோம் . நமது இனம் இலங்கையில் அழிகிறது. அதனை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழன் அழிய இந்திய அரசுதான் காரணம். இலங்கையில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்திவடக் கூடாது என்பதற்காக இலங்கைக்கு ஆயுதம் அனுப்புகைறது இந்திய அரசு. இந்தியாவை பாதுகாக்க , பாகிஸ்தானுடன் மோத தெம்பு இல்லாத திராணி இந்த அரசு, சீனாவிடம், பாகிஸ்தனிடம் இலங்கை நெருங்காமல் இருக்க தமிழனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. தேசத்த காக்க தமிழ் இனத்தை காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

1 comments:

ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும்


அவர்கள் மீது நடத்தப்படும் பாசிச இன அழிப்புப் போருக்கு எதிராகவும்


முதன் முதலில் தீக்குளித்தவர்


பெரம்பலூரைச் சேர்ந்த முஸ்லிம் தமிழர் அப்துல் ரவூஃப் அவர்கள்


நன்றி: நக்கீரன் 07- 02- 09

18 பிப்ரவரி, 2009 அன்று AM 7:02 comment-delete

கருத்துரையிடுக